Oct 19, 2010

புன்னகை அரசி...

பாதை ஓரத்தில்
பரிதாபப் பார்வை,
பசியின் கொடுமைதான்
பார்த்ததும் புரிந்துகொண்டேன்.

வயதும் குறைவு, உடலில்
ஆடையும் குறைவு.
அழுக்காய் இருப்பதில்தான்
அலாதிப்பிரியம் போல...

பால்குடி மறந்து
பலனாலாகிருக்காது,
பச்சிளம் வயதில்
சுயதொழில் முயற்சி.

அவள் நிலை சொல்லியது
அவள் நிலைமையை,
அவள் பார்வை சொல்லியது
அவள் தேவைகளை...

வாய்களில் மட்டும் வார்த்தையில்லை??...
"ஊமை என்பது
அவள் தவறல்ல
கடவுளின் மறதி நிலைதான்."

 உயிர்கொண்டு உலாவரும்
இச்சிருமிதான் - 
பேசமுடியாத வறுமையோ!!...

இந்த நிலையில் கூட
இதழ்களில் சிறு புன்னகை.
'நான் கொடுத்த 
10 /= நோட்டுக்கு
நன்றி கூறுகிறாள் போல...'

இத்தனைக்கும்
உண்மை இதுதான் -
இவளொன்றும் 
அநாதைச் சிறுமியல்ல,
"நான் கண்ட
புன்னகை அரசி."

No comments:

Post a Comment