Dec 23, 2010

அழுதுகொள்ள அவகாசம் தாருங்கள்...

















இன்னும் சிறிது காலம்தான்
உன் திருமணத்திற்கும், 
நம் காதல் அஸ்த்தமனத்திற்கும்...

கல்லூரிசாலையெங்கும் 
நம் காதலின் தடங்கள்.
காலங்கள் கடந்தாலும், 
கனவுகள் முதுமையடைவதில்லை...

"கைவிட்டுப்போனபின்
கண்ணீர் கொண்டு
என்ன பயன்..?"
ஆறுதல் வார்த்தைகளுக்கு 
அர்த்தமில்லை இங்கே...

இனியும் சொல்வதென்ன...! 
"சோகங்களை சொந்தமாக்கிவிட்டேன், 
அழுதுகொள்ள அவகாசம் தாருங்கள்."

Dec 21, 2010

இடையில் எங்கே போனாய்?...

















உனக்குத் தெரியுமா...!
என் பயணத்தை 
அழைத்த பாதைகள்
முட்களால் மூடப்பட்டவைகள்தான்.

கால்கள் வலித்தபோது,
கண்களும் கலங்கியதுண்டு...

வலியில் துவண்டு
வழிதவறும் வேளையில்
வழிகாட்டியாய்
வந்தவள் - நீ

முட்களில் பயணித்தேன்,
ரத்தச் சுவடுகள் பதித்தேன்,
கால்கள் வலிகண்டபோதும்  
கண்கள் கலங்கியதில்லை 
உன் கைகள் என்னை 
அழைத்துச் சென்றதனால்.

இன்று மட்டும்
விழிகளின் விளிம்பில் 
ஈரக்கசிவுகள் ஏன்?...

கைகளும் வெறுமை, 
பாதையிலும் தனிமை...

இடையில் எங்கே போனாய்?...
வா....
வந்து என் கைகளைப் பற்று.
கண்களின் ஈரம் காய்வதற்குள்
உடலை விட்டு என் உயிர் போகும்
அதுவரைக்குமாவது  
என்னுடன் பயணி...

Dec 16, 2010

*******************

விடைபெற்றுச்சென்ற
பிரிவுகள்
என் நினைவுகளை
அரங்கேற்றிக்கொண்டிருக்கிறன - 
இந்த
அர்த்தராத்திரியில். 

Dec 14, 2010

தனிமையில் இருவரும்...


அன்றொருநாள், 
தனிமையில் இருவரும்,

உன் கன்னத்தோடு
என் கன்னம் வைத்து..

உன் காதருகில் 
என் உதடுகள்..

உன் தோடுகளை தாங்கிநின்ற பாகத்தை  
பசிகொண்டு கவ்விட -

கூச்சம் கொண்ட இரு கரங்கள்
என் நெஞ்சில் மோதி
மெதுவாய் என்னை
விலக்கிய போது,
கண்டு கொண்டேன் -

காமதேவனின் யாகம்
உன்கண்களில் ஆரம்பமானதை...

Dec 3, 2010

நீயும் நானும்...









காரணமின்றி கதைக்கிறோம் 
இரவு முழுவதும்.
அன்றும் அப்படித்தான்
ஏதேதோ பேசினோம்
எதற்கும் தலைப்பில்லை...
(தலைப்புத்தான் தேவையா நமக்குள்ளான வார்த்தைப் பரிமாற்றத்திற்கு??...)

எப்படி இருக்காய்?...
சாப்பிட்டாயா?...
ஏன் லேட்?...
வெளியில போனாயா?...
என்ன செய்தாய் இன்டைக்கு?...
ம்ம்ம்.......
எல்லோரும் தூங்கிட்டாங்களா?...
நீ தூங்கலையா?....ஏன்?...
எனக்காகவா?...
.........
இப்படி -
வழமையான ஆரம்பம்தான் அன்றும்..

பேச்சின் நடுவே 
கேட்டே விட்டேன், 
கேட்க நினைத்ததை...
"ஹேய் ..., நாம  ரெண்டு பேரும்  'லவ்' பண்ணுவோமா??...."

தெளிவாகத்தான் கேட்டேன், 
விளங்காதவளாய் 
மீண்டும் கேட்டாய், 
அப்போதுதான் புரிந்தது
நான்தான் ரொம்ப லேட் என்று...

இருந்தும் 
மீண்டும் கேட்டேன் - 
"நாம  ரெண்டு பேரும் 'லவ்' பண்ணுவோமா??...."
.........................
.....................................
பெண்களுக்கேயான நாணம்  உன்னை கொள்ளை கொண்டிருந்தது, 
நிலாவின் தலமையில் 
நட்சத்திரங்கள் உன்னிடம் முறையிட்டன -
"என்ன நீ...
இன்றைக்கு 
எங்களை விடவும் 
பிரகாசமாய் இருக்கிறாய்?..." 

இவைகளையும் தாண்டிய 
உன் மனப்போராட்டம்... 
"அய்யோ....என்ன இவன், 
எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி திடீரெண்டு கேட்டுட்டானே..." 
என்கிற உன் தவிப்பு...
இந்த அழகை எல்லாம் 
முதல் முதலில் 
அள்ளிக்க் கொண்டேன் 
என் மனத்திரையில்...

..............................
"குறுகிய மௌனம்"
(அந்த நேரம் அதுதான் சிறந்தது என்று தெரிந்து வைத்திருந்தாள் போல...)
இருந்தும் 
காத்திருந்தேன் சில நொடிகள்
தெரிந்த பதிலுக்காய்...

"அய்யோ....என்ன இப்படி கேட்குறீங்க?...உங்களுக்குத் தெரியாதா?..."
முட்டி மோதி வந்து விழுந்தன வார்த்தைகள்
பதில்களாய் அல்ல,
மீண்டும் 
என்னை நோக்கிய கேள்விகளாய்...
இப்போ, நான் மாட்டி... 

எப்படியோ....
சமாளித்து, 
முற்றுப்புள்ளி வைக்காமல் முடித்துவிட்டு
வெளியில் வந்த போது
சொல்லிக்கொள்ளாமல் சென்று ரிலாக்ஸ் ஆனது 
கஸ்ட்டப்பட்டு கதைத்துக் களைத்துவிட்ட   மனசு...


...........................
கடைசியில் -
நம்மிடம் வந்து 
தன் இயலாமையை 
ஒப்புக்கொண்டன - 
'வார்த்தைகள்'.

"மன்னிச்சிடுங்க, 
எங்களாலும் முடியவில்லை
உங்களுக்குள்ளான உறவின் ஆழத்தை உச்சரிக்க..."

Dec 1, 2010

**********************


கனவில் வந்து 
கதையளக்கிறாய், 
நிஜத்தில் இங்கு
காணாமல் போகிறாய்.. 


பொழுது புலர்ந்தபின்னும்
கண்மூடிக் காத்திருக்கிறேன்
என் கனவே -
உன் வருகைக்காய்...