Dec 23, 2010

அழுதுகொள்ள அவகாசம் தாருங்கள்...

















இன்னும் சிறிது காலம்தான்
உன் திருமணத்திற்கும், 
நம் காதல் அஸ்த்தமனத்திற்கும்...

கல்லூரிசாலையெங்கும் 
நம் காதலின் தடங்கள்.
காலங்கள் கடந்தாலும், 
கனவுகள் முதுமையடைவதில்லை...

"கைவிட்டுப்போனபின்
கண்ணீர் கொண்டு
என்ன பயன்..?"
ஆறுதல் வார்த்தைகளுக்கு 
அர்த்தமில்லை இங்கே...

இனியும் சொல்வதென்ன...! 
"சோகங்களை சொந்தமாக்கிவிட்டேன், 
அழுதுகொள்ள அவகாசம் தாருங்கள்."

Dec 21, 2010

இடையில் எங்கே போனாய்?...

















உனக்குத் தெரியுமா...!
என் பயணத்தை 
அழைத்த பாதைகள்
முட்களால் மூடப்பட்டவைகள்தான்.

கால்கள் வலித்தபோது,
கண்களும் கலங்கியதுண்டு...

வலியில் துவண்டு
வழிதவறும் வேளையில்
வழிகாட்டியாய்
வந்தவள் - நீ

முட்களில் பயணித்தேன்,
ரத்தச் சுவடுகள் பதித்தேன்,
கால்கள் வலிகண்டபோதும்  
கண்கள் கலங்கியதில்லை 
உன் கைகள் என்னை 
அழைத்துச் சென்றதனால்.

இன்று மட்டும்
விழிகளின் விளிம்பில் 
ஈரக்கசிவுகள் ஏன்?...

கைகளும் வெறுமை, 
பாதையிலும் தனிமை...

இடையில் எங்கே போனாய்?...
வா....
வந்து என் கைகளைப் பற்று.
கண்களின் ஈரம் காய்வதற்குள்
உடலை விட்டு என் உயிர் போகும்
அதுவரைக்குமாவது  
என்னுடன் பயணி...

Dec 16, 2010

*******************

விடைபெற்றுச்சென்ற
பிரிவுகள்
என் நினைவுகளை
அரங்கேற்றிக்கொண்டிருக்கிறன - 
இந்த
அர்த்தராத்திரியில். 

Dec 14, 2010

தனிமையில் இருவரும்...


அன்றொருநாள், 
தனிமையில் இருவரும்,

உன் கன்னத்தோடு
என் கன்னம் வைத்து..

உன் காதருகில் 
என் உதடுகள்..

உன் தோடுகளை தாங்கிநின்ற பாகத்தை  
பசிகொண்டு கவ்விட -

கூச்சம் கொண்ட இரு கரங்கள்
என் நெஞ்சில் மோதி
மெதுவாய் என்னை
விலக்கிய போது,
கண்டு கொண்டேன் -

காமதேவனின் யாகம்
உன்கண்களில் ஆரம்பமானதை...

Dec 3, 2010

நீயும் நானும்...









காரணமின்றி கதைக்கிறோம் 
இரவு முழுவதும்.
அன்றும் அப்படித்தான்
ஏதேதோ பேசினோம்
எதற்கும் தலைப்பில்லை...
(தலைப்புத்தான் தேவையா நமக்குள்ளான வார்த்தைப் பரிமாற்றத்திற்கு??...)

எப்படி இருக்காய்?...
சாப்பிட்டாயா?...
ஏன் லேட்?...
வெளியில போனாயா?...
என்ன செய்தாய் இன்டைக்கு?...
ம்ம்ம்.......
எல்லோரும் தூங்கிட்டாங்களா?...
நீ தூங்கலையா?....ஏன்?...
எனக்காகவா?...
.........
இப்படி -
வழமையான ஆரம்பம்தான் அன்றும்..

பேச்சின் நடுவே 
கேட்டே விட்டேன், 
கேட்க நினைத்ததை...
"ஹேய் ..., நாம  ரெண்டு பேரும்  'லவ்' பண்ணுவோமா??...."

தெளிவாகத்தான் கேட்டேன், 
விளங்காதவளாய் 
மீண்டும் கேட்டாய், 
அப்போதுதான் புரிந்தது
நான்தான் ரொம்ப லேட் என்று...

இருந்தும் 
மீண்டும் கேட்டேன் - 
"நாம  ரெண்டு பேரும் 'லவ்' பண்ணுவோமா??...."
.........................
.....................................
பெண்களுக்கேயான நாணம்  உன்னை கொள்ளை கொண்டிருந்தது, 
நிலாவின் தலமையில் 
நட்சத்திரங்கள் உன்னிடம் முறையிட்டன -
"என்ன நீ...
இன்றைக்கு 
எங்களை விடவும் 
பிரகாசமாய் இருக்கிறாய்?..." 

இவைகளையும் தாண்டிய 
உன் மனப்போராட்டம்... 
"அய்யோ....என்ன இவன், 
எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி திடீரெண்டு கேட்டுட்டானே..." 
என்கிற உன் தவிப்பு...
இந்த அழகை எல்லாம் 
முதல் முதலில் 
அள்ளிக்க் கொண்டேன் 
என் மனத்திரையில்...

..............................
"குறுகிய மௌனம்"
(அந்த நேரம் அதுதான் சிறந்தது என்று தெரிந்து வைத்திருந்தாள் போல...)
இருந்தும் 
காத்திருந்தேன் சில நொடிகள்
தெரிந்த பதிலுக்காய்...

"அய்யோ....என்ன இப்படி கேட்குறீங்க?...உங்களுக்குத் தெரியாதா?..."
முட்டி மோதி வந்து விழுந்தன வார்த்தைகள்
பதில்களாய் அல்ல,
மீண்டும் 
என்னை நோக்கிய கேள்விகளாய்...
இப்போ, நான் மாட்டி... 

எப்படியோ....
சமாளித்து, 
முற்றுப்புள்ளி வைக்காமல் முடித்துவிட்டு
வெளியில் வந்த போது
சொல்லிக்கொள்ளாமல் சென்று ரிலாக்ஸ் ஆனது 
கஸ்ட்டப்பட்டு கதைத்துக் களைத்துவிட்ட   மனசு...


...........................
கடைசியில் -
நம்மிடம் வந்து 
தன் இயலாமையை 
ஒப்புக்கொண்டன - 
'வார்த்தைகள்'.

"மன்னிச்சிடுங்க, 
எங்களாலும் முடியவில்லை
உங்களுக்குள்ளான உறவின் ஆழத்தை உச்சரிக்க..."

Dec 1, 2010

**********************


கனவில் வந்து 
கதையளக்கிறாய், 
நிஜத்தில் இங்கு
காணாமல் போகிறாய்.. 


பொழுது புலர்ந்தபின்னும்
கண்மூடிக் காத்திருக்கிறேன்
என் கனவே -
உன் வருகைக்காய்...

Nov 28, 2010

பரிசு...

நம்
கல்யாணப் பரிசை
உன்
கருவிலிருந்து
என் 
கரங்களுக்கு 
எப்போது தருவாய்
காதலியே!!...

Nov 27, 2010

பிரார்த்தனை...

ஒவ்வொரு  இரவிலும்
உன்னைக் 
கனவில் காண 
கடவுளிடம் 
கையேந்துகிறேன் 
கண்மணியே!... 

Nov 23, 2010

Go away...



முகம் காணவிடினும் 
முழு மனதிலும் நீயே!!...

என்னை சுற்றி உன் நினைவுகள்
எப்படி மறப்பது உன்னை??...

விடைகொடு என் தோழி -
உன்னை மறப்பதற்கு...

Nov 22, 2010

w8ing for u...



காத்திருக்க தெரியாது எனக்கு, 
காத்திருக்கவும் பிடிக்காது எனக்கு - 
'கொஞ்சம் wait பண்ணுங்க..' என்று
நீ சொல்லும் வரைக்கும்...

Nov 21, 2010

ஏன்?,,,

அழவைப்பதில் 
காதலிகள் மட்டும் 
தோற்பதே இல்லை - ஏன்?

ஆண்களின் கண்ணீர் 
அவ்வளவு சுவையானதா??...

Nov 20, 2010

மனங்கள்...

"ஹலோ.... கொஹமத??..."
வாய்வார்த்தைகளில் மட்டும் 
சுகவிசாரணைகள்,
மனங்களோ - வெறுமையில்!!...

Oct 29, 2010

காரணம்??...


கண்களால் பேசுவார்களாம்
காதலர்கள்.
இங்கு -
கண்கள் பார்க்கவே 
காரணம் கேட்கிறாள்
என் காதலி...

Oct 28, 2010

கவிதை..

கனவுகள், 
கற்பனைகள்,
காதல் நினைவுகளின் 
அரங்கேற்றம். 

Oct 23, 2010

திரை.

உன்னைப்பார்த்துக்
கண்ணடிப்பதனால் -
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 
மேகத் திரையிடுகிறேன் 
கண்மணியே!...

Oct 20, 2010

We dnt kw, bt...

உனக்கும் தெரியாது, 
எனக்கும் தெரியாது - நம்
காதலுக்கு தெரியும் 
நான் உன்னை காதலிப்பது...

Oct 19, 2010

புன்னகை அரசி...

பாதை ஓரத்தில்
பரிதாபப் பார்வை,
பசியின் கொடுமைதான்
பார்த்ததும் புரிந்துகொண்டேன்.

வயதும் குறைவு, உடலில்
ஆடையும் குறைவு.
அழுக்காய் இருப்பதில்தான்
அலாதிப்பிரியம் போல...

பால்குடி மறந்து
பலனாலாகிருக்காது,
பச்சிளம் வயதில்
சுயதொழில் முயற்சி.

அவள் நிலை சொல்லியது
அவள் நிலைமையை,
அவள் பார்வை சொல்லியது
அவள் தேவைகளை...

வாய்களில் மட்டும் வார்த்தையில்லை??...
"ஊமை என்பது
அவள் தவறல்ல
கடவுளின் மறதி நிலைதான்."

 உயிர்கொண்டு உலாவரும்
இச்சிருமிதான் - 
பேசமுடியாத வறுமையோ!!...

இந்த நிலையில் கூட
இதழ்களில் சிறு புன்னகை.
'நான் கொடுத்த 
10 /= நோட்டுக்கு
நன்றி கூறுகிறாள் போல...'

இத்தனைக்கும்
உண்மை இதுதான் -
இவளொன்றும் 
அநாதைச் சிறுமியல்ல,
"நான் கண்ட
புன்னகை அரசி."

Oct 17, 2010

கல்வி.

கனவுக்கு
தடைபோட்டு,
இரவுக்கு
எடைபோட்டு,
இவனும் 
படிக்கிறான் -
        "பல்கலைக்கழகத்தில்"

உன் பார்வைக்காய்...

வேதனையின் 
விளிம்பிலிருந்து
ஏங்குகிறேன் - உன் 
கடைக்கண் பார்வைக்காய்...

Oct 16, 2010

கனவுக் காதல்...

இப்போதெல்லாம் 
கனவுகளை
காதல் செய்கிறேன்.
காரணம் -

கனவில் மட்டுமே
என்னை - 
நீ காதலிப்பதால்...

Oct 14, 2010

பைத்தியக்காரன்.

அமாவாசை இருளில்
தொலைந்த சில இரவுகளை
பகலில் தேடுகிறான் - இந்த
இளம் பைத்தியக்காரன்...

Oct 13, 2010

தாஜ்மஹால்.



உலக 
அதிசயங்களில் 
ஒரு 
கல்லறை...

Oct 12, 2010

Be with me...

















உன்னை விட்டுப் பிரிவதில் 
துளி கூட சம்மதமில்லை...

'போகாதே நில்' என்று
உரிமையோடு தடுக்கும் 
என் கரங்களை 
உதாசீனம் செய்கிறாய்.

'அய்யோ, நான் சீக்கிரம் போகணும்பா..!"
என்ற சின்ன வாசகத்தை
கெஞ்சும் என் விழிகளுக்கு 
விடையென வீசுகிறாய்.

அச்சம் கலந்த பயத்தில்,
போக துடிக்கும் பதட்டத்தில்,
உடைந்து போகும் 
என் உணர்வுகளை 
ஓரக்கண்ணால் நோக்குகிறாய்.

இப்போதும்-
உன்னை விட்டு பிரிவதில்
துளி கூட சம்மதமில்லை,

உன் துப்பட்டாவை பிடித்து
பின்னால் ழுக்கின்றன
என் சுவாசக் காற்று...

Oct 6, 2010

காதல் இரவுகள்...

என்
ஒவ்வொரு இரவும்
அமாவாசையாக கழிவது 

ஏனடி?


நிலவு -
நீ என்பதனால?...

Oct 5, 2010

தனிமை...



இப்போதெல்லாம்
என்னைத்தேடி
தனிமைகள்
தவிப்பது ஏனடி?...

Oct 4, 2010

மனச்சாட்சி...


உனக்கும் மனதிருக்கு
ஓர் நாள் உணர்ந்துகொள்வாய்
அப்போ புரியும் -
இன்றைய என் வேதனைகள்...

Oct 3, 2010

???...

இப்போதெல்லாம்
என் உதடுகள்
உளறுவது
கருவில்லாத
கவிதைகளைத்தான்

Oct 2, 2010

லவ் பண்ணு....

என்னையறியாமல்
கண்கள் உன்னை
கலங்கவைதிருப்பின்
காதலித்து கண்டித்துவிடு
கண்மணியே....

Oct 1, 2010

ஸ்பரிசம் ...

நீ தொடுகையில்
தன்னை மறக்காமல் இருக்க
இந்த மலர்களால் மட்டும்தானே
முடிகிறது...

Sep 30, 2010

காகிதத்தில் உமிழப்பட்ட உளறல்கள்...

 
இது என்ன வாழ்க்கைங்க?.... என்று கேட்க தோனுது.... அட ஆரம்பமே சலிக்குதே என்று யோசிக்கிறீங்களா?..அப்படி தோண காரணமும் இருக்குங்க...

Oh ...கொஞ்சம் பொறுங்க, ஆரம்பத்திலேயே இத சொல்லிக்கிறன். "என் மனசின் வார்த்தைகளுக்கு உயிரோட்டமான உருவம் கொடுக்க எனக்கு தெரியல, But எனக்கு தெரிஞ்ச மொழி நடைய உங்களால புரிஞ்சுக்க முடியும் என்ற நம்பிக்கையில சொல்றன்...." 

ஆமாங்க, எல்லோருக்கும் அவங்கட வாழ்கையில சில கணங்கள், சில நாட்கள், சில இடங்கள், சில சம்பவங்கள்,  சில சந்திப்புக்கள், சில நபர்கள் மறக்க முடியாதவையாகின்றன. இதுமட்டுமில்ல, இதுல இன்னும் பல அடங்கலாம். இவை அனைத்தும் அவங்கட வாழ்க்கைல நிலையான நினைவாக நிற்கும். சில சமயம் அவங்கட வாழ்கைய மாற்றியமைக்கும் சக்திகளாக கூட அமைஞ்சாலும் ஆச்சரியபடுவதக்கில்லீங்க...


அப்படித்தான் எனக்கும்,
 

சில கணங்கள், 
சில நாட்கள், 
சில சம்பவங்கள், 
சில சந்திப்புகள், 
சில வார்த்தைகள், 
சில வலிகள்..............என்றும் நிலையான நினைவாக நிற்குது... "என் இந்த பக்கத்தின் அதிகமான  வார்த்தைகளுக்கு  கருவாக  இருப்பது கூட அவள்தான்.." என் வாழ்கையில சில மாற்றங்கள், சில மறக்க முடியாத கணங்கள் தந்தது அவள்தான். அட, எனக்கெண்டு ஒரு வாழ்க இருக்கு என்று எனக்கு உணர வைத்ததே அவள்தாங்க...
 

உங்கள எத்தன பேர்  உங்கட வாழ்கைய உணர்ந்து  வாழ்றீங்க?... 
உங்கள நீங்க நேசிக்கிற அளவுக்கு OR அதற்கு மேல் உங்கள இன்னொரு ஜீவன் நேசிச்சால், அந்த நேசத்த நீங்க உணர்ந்தால்,...அப்போ உங்கட வாழ்கைய நீங்க உணர்ந்து கொள்வீங்க.....(அப்படித்தான் நான் உணர்ந்துகொண்டேன்). உங்கள அறியாம உங்கள ஒரு மாற்றம், அவளுக்காக வாழ்வதில்தான் வாழ்கைண்ட அர்த்தம் புரியும் என்கிற கிறுக்குத்தனமான ஒரு நம்பிக்க.......அட, அது நம்பிக்க மட்டுமில்லங்க, அதுவே உங்கள திருப்திப்படுதுகின்ற சந்தோஷமான கணங்களாக அமையும்.... 

உங்கள ஒண்டு கேட்கவா?....
 

அனைத்தையும் ஒரு சில வினாடிகுள்ள அடைஞ்ச திருப்தி உங்களுக்கு இருக்கா?...
எனக்கு இருக்குங்க. வாழ்கையில இதற்கு மேல அடைய எதுவுமில்ல என்கிறளவு திருப்திய நான் அடஞ்சன். இந்தளவு திருப்திய எனக்கு தந்தது அவளது "அன்பும், காதலும்தான்"......அது மட்டும்தாங்க.  அதுலதான் முழுமையான திருப்திய அடைய முடியும். உங்களுக்கு எப்படியோ தெரியில, நான் அனைத்தையும் அடைஞ்சது அவளது அன்பில்தான்...


ஒன்று மட்டும் இன்னும் புரியாம இருக்கு.

"எப்போ இந்த காதல் வந்திச்சு?.."


அழக பார்த்தோ, அந்தஸ்த பார்த்தோ வரலீங்க இந்த காதல். அப்படி வாறது காதல் என்கிறதில எனக்கு நம்பிக்க இல்ல. என்ன பொறுத்தமட்டும், ஒருத்தர ஒருத்தர் பழகும்போது இருவருக்குள்ளும்  ஏற்படுகின்ற பரிமாற்றங்களினதும், புரிந்துனர்வுகளினதும் உச்சகட்டம்தான் "காதல்"... இத எத்தன பேர் ஒத்துகிறீன்களோ தெரியல, But கண்டதும் காதல், கதைத்ததும் காதல், கண்ணடித்ததும் காதல் என்கிற இந்த சினிமா காதலில எனக்கு இம்மியளவும் நம்பிக்க இல்ல, மரியாதையும் இல்ல....


இந்த காதல் எப்ப வந்திச்சு என்டுதான் எனக்கு தெரியல But சாகும் வரைக்கும் எனக்குள்ள இருக்கும் எனபதில உறுதி..........அதுதானே காதல், இல்லையா?..

.............................

....................................

..............................................

"அவள்"...

என்ட வாழ்கையில நான் சந்தோசமா இருந்த நாட்கள். வாழ்கயிண்ட ஒவ்வொரு நொடியும் சுவைச்சு வாழ்ந்த நாட்கள்.......(நினைக்கும் போதே இனிக்குதுங்க).

என் வாழ்கைய நான் வாழ்ந்த நாட்கள் இவ்வளவு குறுகியதா என்கிறத அவள் பிரிவிலதான் நான் உணர்ந்தன்...ஏன் இந்த பிரிவு?..

நிச்சயமாக அவள்ல எந்த பிழையும் இல்லேங்க, காலத்தின் கட்டளைதான் இந்த பிரிவு என்டு சொல்லவும் முடியில்ல.....



பிரிவு.......................................................வலிக்குது...

ம்ம்ம்...........சில கணங்கள், இந்த வலிகளால என்ன அறியாம என் கண்கள் ஈரமாவத நான் உணரன்...............ஆமாங்க, இற்றைவரைக்கும் என் இதயதில அவள், என்றைக்குமே அவள் மட்டும்தாங்க...
அப்புறம் எப்படி இதற்கு பிரிவென்று பெயராகும்???...


...........................

................................இன்னும் பக்கம் பக்கமாக எழுதலாம், But உணர்சிகளுக்கு எழுத்துரு கொடுக்கும் திறம எனக்கு கெடயாதுங்க.... ஏதோ, என் மனசின்ட உளறல்கள ஒட்டுக்கேட்டு உமிழ்ந்து விட்டன என் பேனா முனைகள்....


எப்படியோ ஆரம்பிச்சு எப்படியோ முடிக்கிறன், சரியா பிழையா தெரியல (இலக்கண பிழைகள் எனக்கு விதிவிலக்காக இருக்கட்டும்).

But , ஒன்டு மட்டும் நிச்சயம்.....

ஒவ்வருவரிண்ட வாழ்க்கையிலையும் மறக்க முடியாத சில நிலையான நினைவுகள் இருக்கும். அதுக்கு உயிர் கொடுக்கிறதே இந்த பிரிவுதான்...

அப்படியான பிரிவ நீங்க அடைஞ்சிருகயலா?..

அடையும் வர என் வார்த்தைகளின் உணர்ச்சிகள உங்களால புரிஞ்சுக்க முடியாது.....அப்படியான பிரிவ நீங்க உணரும்போது உங்களுக்கே கேட்க தோணும் -

"இது என்ன வாழ்க்கைங்க?...." என்று.




Sep 20, 2010

இதுதான் நான்...


குள்ளமான தோற்றம்,
ஒல்லியான உடம்பு,
பரட்டைத் தலை,
பருவிழுந்த முகம்,
அகன்ற விழி,
யானைச் செவி,
போசாக்கற்ற உடம்பில்-
பொருந்தாத கை, கால்கள்.


இத்தனைக்கும்,
இவனும் ஒரு பொய்யன்...

Sep 7, 2010

வலி...


உள்ளங்கள்
ஊமையான போது - உன்
உதடுகள்
உளறிய வார்த்தைகள்..


      "Sorry, .....................................
      ................................................
      ................................................"


நெஞ்சம் குமுறிய போது
கண்கள் குளமாகியது
கண்ணீரால் மட்டுமல்ல
காதலியே !!...

Sep 3, 2010

Lecture...

புரியாத பாசைகள்,
புரியாமல் போனதால்,
பரிகாசப் பார்வைகள்,
பல பக்கங்களிலுமிருந்து...

பாவம் இவன்..

Aug 27, 2010

அவள்

"பெண்" என்ற ஒரு சொல்லின்
முழுமையான அர்த்தத்தை
தந்தவள் - நீ

எத்தனை மகிமை -  
       உனக்குள்ளும், 
       உன் பெண்மைக்குள்ளும்...

Aug 22, 2010

"Happy Birth Day Dear..."



அர்த்த ராத்திரியில்,
அகிலமே உறங்குகையில்,
அந்தரத்தில் ஓர் நிலவு
அவசரமாய் ஓடுவதெங்கே?...

அவசரப்படதே,
ஜன்னல் திரை நீக்காதே,
எனக்கு முன்னல்
நிலவு வாழ்த்து சொல்ல கூடும்...

"Happy Birth Day Dear..."

Aug 21, 2010

விபத்து...

உன்னில் உள்ள
ஒவ்வொரு
வளைவுகளிலும்
வழுக்கி வீழ்ந்து
விபத்துக்குள்ளாகிறேன்
நான்,
தினந்தோரும்...