Dec 21, 2010

இடையில் எங்கே போனாய்?...

















உனக்குத் தெரியுமா...!
என் பயணத்தை 
அழைத்த பாதைகள்
முட்களால் மூடப்பட்டவைகள்தான்.

கால்கள் வலித்தபோது,
கண்களும் கலங்கியதுண்டு...

வலியில் துவண்டு
வழிதவறும் வேளையில்
வழிகாட்டியாய்
வந்தவள் - நீ

முட்களில் பயணித்தேன்,
ரத்தச் சுவடுகள் பதித்தேன்,
கால்கள் வலிகண்டபோதும்  
கண்கள் கலங்கியதில்லை 
உன் கைகள் என்னை 
அழைத்துச் சென்றதனால்.

இன்று மட்டும்
விழிகளின் விளிம்பில் 
ஈரக்கசிவுகள் ஏன்?...

கைகளும் வெறுமை, 
பாதையிலும் தனிமை...

இடையில் எங்கே போனாய்?...
வா....
வந்து என் கைகளைப் பற்று.
கண்களின் ஈரம் காய்வதற்குள்
உடலை விட்டு என் உயிர் போகும்
அதுவரைக்குமாவது  
என்னுடன் பயணி...

No comments:

Post a Comment